செய்திகள்
அமெரிக்க ராணுவ தலைமையகம்

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு

Published On 2021-02-26 08:29 GMT   |   Update On 2021-02-26 08:29 GMT
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

வாஷிங்டன்:

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது சமீபத்தில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்கா கூட்டணி நாடுகளை பாதுகாப்பதில் ஜோபைடன் அரசு விழிப்பாக இருக்கிறது. அமெரிக்கா நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News