செய்திகள்
கோப்புப்படம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - அமெரிக்கா அறிவிப்பு

Published On 2021-02-26 02:49 GMT   |   Update On 2021-02-26 02:49 GMT
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:


இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன.

முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு சிறிது காலத்துக்கு பின்னர்தான் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவுமற்றும் மருந்து நிர்வாகம்எப்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே அங்கு பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளை விட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி விலை குறைவானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த தடுப்பூசியை பிரிஜ்ஜில் வைத்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாம்.

கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக 66 சதவீதம் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசி பற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த வாரம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசியை விடுவிக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார். மேலும் இந்த தடுப்பூசி எப்.டி.ஏ.விடம் இருந்து அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்க முடியும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் கூறுகிறது.
Tags:    

Similar News