செய்திகள்
கல்வான் பள்ளத்தாக்கு

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு- முதல் முறையாக ஒப்புக்கொண்டது சீனா

Published On 2021-02-19 04:15 GMT   |   Update On 2021-02-19 04:15 GMT
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்திருப்பதை சீன அரசு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
பீஜிங்:

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. 

இந்த மோதலில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்தியா கூறியது. 45 சீன வீரர்கள் இறந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக சீன அரசு உயிரிழப்பை ஒப்புக்கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக சீன ராணுவம் இன்று கூறி உள்ளது.

சீன ராணுவத்தின் சின்ஜியாங் படைப்பிரிவு கமாண்டர் குய் ஃபபாவோ மற்றும் சென் ஹாங்ஜன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு சீன மத்திய ராணுவ ஆணையம் மரியாதை செலுத்தி கவுரவித்ததாகவும், சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பி.எல்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. 
Tags:    

Similar News