செய்திகள்
பிபிசி அலுவலகம்

சீனாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது -பிரிட்டன் வெளியுறவு மந்திரி கண்டனம்

Published On 2021-02-12 08:23 GMT   |   Update On 2021-02-12 08:23 GMT
சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
லண்டன்:

கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்கர் இனவாத சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், ஒளிபரப்பு நெறிமுறைகளை மீறியதாக பிபிசி உலக செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. 

பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கைக்கு, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி டோமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது, என அவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் இணைய சுதந்திரத்திற்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

பிரிட்டனில் சமீபத்தில் சீன அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் (சிஜிடிஎன்) ஒளிபரப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டது. பிரிட்டன் சட்டத்தை மீறியதாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் பணிகளுக்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News