செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அமெரிக்கா தலா 10 கோடி பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம்

Published On 2021-02-12 02:28 GMT   |   Update On 2021-02-12 02:28 GMT
அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தலா 10 கோடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்கா கொரோனா பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.  பிற நாடுகளை விட பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.  இதனை கட்டுப்படுத்த டிரம்ப் தலைமையிலான அரசு தவறிவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமைந்தது.  இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்புகளால் சந்தித்துள்ள அதிக பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் பைடன் இறங்கினார்.

இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.  அந்நாட்டில் பைசர் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் கூறும்பொழுது, 10 கோடி மாடர்னா தடுப்பூசிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் அரசால் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

இதேபோன்று கூடுதலாக 10 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News