செய்திகள்
ஸ்டீபன் டுஜாரிக்

விவசாயிகள் பேரணியில் வன்முறை : அமைதியான போராட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் - ஐ.நா. கருத்து

Published On 2021-01-28 00:09 GMT   |   Update On 2021-01-28 00:09 GMT
அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என ஸ்டீபன் டுஜாரிக் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.‌பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் "இதுபோன்ற பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வது அமைதியான போராட்டங்கள், சுதந்திரமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அகிம்சை ஆகியவற்றை மதிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
Tags:    

Similar News