செய்திகள்
கொரோனா பரிசோதனை

ஸ்பெயினில் பெருகும் கொரோனா - 26 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2021-01-23 20:19 GMT   |   Update On 2021-01-23 20:19 GMT
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாட்ரிட்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 3 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 55,441 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News