செய்திகள்
ஜோ பைடன்

முக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்

Published On 2021-01-22 23:09 GMT   |   Update On 2021-01-22 23:09 GMT
முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவியேற்றார். அதன் பின்னர் அவர் அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஜனாதிபதியாக தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

இந்தநிலையில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.

புதன்கிழமை மாலை வாஷிங்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன் முக கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.‌ எனினும் உடனடியாக ஜோ பைடன் மாஸ்க் அணிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முக கவசம் அணிவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் ‘‘முக கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. ‌இது எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற கூடிய ஒரு தேசபக்தி செயல். எனவே தான் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தேன்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News