செய்திகள்
கமலா ஹாரிஸ்

இந்தியா, அமெரிக்கா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் கமலா ஹாரிஸ் -வெள்ளை மாளிகை

Published On 2021-01-22 04:10 GMT   |   Update On 2021-01-22 10:43 GMT
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றதால் இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளி தலைவரான கமலா ஹாரிசும் பதவியேற்றுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் அங்கம் வகித்ததால், இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சாகி கூறியிருப்பதாவது:-

பல முறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் பைடன், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தலைவர்களுக்கு இடையிலான நீண்டகால வெற்றிகரமான உறவை மதிக்கிறார். இது தொடரவேண்டும் என்றும் விரும்புகிறார்.

மேலும், துணை அதிபராக முதல் முறையாக இந்திய அமெரிக்கர் பொறுப்பேற்றிருப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரலாற்று தருணம். இதன்மூலம் இந்தியா-அமெரிக்கா நட்புறவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறு ஜென் சாகி கூறி உள்ளார்.

அதிபர் பைடன் தனது அமைச்சரவையின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பதவிகளில் இந்திய வம்சாவளியினரை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News