செய்திகள்
கோப்புப்படம்

பிலிப்பைன்சில், இந்திய தடுப்பூசியை அனுமதிக்க விண்ணப்பம்

Published On 2021-01-21 22:22 GMT   |   Update On 2021-01-21 22:22 GMT
கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் பிலிப்பைன்சிஸ் நிர்வாகத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது.
மாஸ்கோ:

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு சமீபத்தில் அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி அந்த நிறுவனம், பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மருந்து நிர்வாகத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது.

“அவர்கள் இன்று காலை இது பற்றிய விண்ணப்பம் அளித்துள்ளனர். அதை முன்மதிப்பீடு செய்து வருகிறோம்” என்று அந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை இயக்குனர் கூறி உள்ளார்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கடந்த வாரம் இங்கிலாந்து-சுவீடன் கூட்டு தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை 17 மில்லியன் டோஸ் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த நவம்பரில் ஏற்கனவே முதல் தவணையாக 2.6 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல அமெரிக்காவின் பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளுக்கும், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் பிலிப்பைன்ஸ் அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 14.8 கோடி டோஸ் தடுப்பூசிகளை பெற்று நாட்டு மக்களுக்கு பயன்படுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News