செய்திகள்
கொரோனா தடுப்பூசியை வழங்கிய அதிகாரி

வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா

Published On 2021-01-21 21:26 GMT   |   Update On 2021-01-21 21:26 GMT
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
டாக்கா:

கொரோனா என்ற கொடூர அரக்கனை விரட்டும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் 19 என்ற இந்த வைரசை ஒடுக்குவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை கண்டறிந்த இந்தியா, அதனை கடந்த 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் இந்த தடு்ப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு ஒன்றரை லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றொரு நட்பு நாடான வங்காளதேசத்திற்கு தற்போது 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனிடம், இந்திய தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி ஒப்படைத்தார்.
Tags:    

Similar News