செய்திகள்
கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல- கமலா ஹாரிஸ்

Published On 2021-01-19 06:15 GMT   |   Update On 2021-01-19 06:15 GMT
அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அவர் நாளை அதிபராக பதவியேற்கும் ஜோபைடனுடன் சேர்ந்தே துணை அதிபராக பொறுப்பேற்கிறார். இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் கூறியதாவது:-

‘நாளை நாங்கள் பதவி ஏற்க செல்ல உள்ளோம். அந்த பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை சீரமைப்பதற்கு நிறைய பணிகள் இருக்கிறது. அது எளிதாக இருக்க போவதில்லை.

கொரோனா தடுப்பூசி செலுத்துவது, மீண்டு வருவது, வேலை செய்யும் மக்கள், அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம், போன்ற நிறைய பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபை உறுப்பினராக கமலா ஹாரிஸ் தேர்வி செய்யப்பட்டு இருந்தார். அவர் துணை அதிபராக பொறுப்பேற்றதும், தனது செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். அவரது செனட் சபை பதவிக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த அலெக்ஸ் படில்லா நியமிக்கப்படுகிறார்.

Tags:    

Similar News