செய்திகள்
ஐஸ் கிரீம் (கோப்பு படம்)

ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று - சீனாவில் கண்டுபிடிப்பு

Published On 2021-01-16 00:09 GMT   |   Update On 2021-01-16 00:09 GMT
ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிஜீங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவ்வால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த
விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மனிதர்களுடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் சிங்கம், புலி, கொரிலா உள்ளிட்ட பல்வேறு உயிரிழங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிலும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிரீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிச்சாலைக்கு பால் பவுடன் நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.

அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது. இதனால், உடனடியாக அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.

ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஐஸ் கிரீம் தொழிற்சாலை மூடப்பட்டு அங்கு வேலை செய்துவந்த பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீனாவில் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News