செய்திகள்
டிரம்ப்

டிரம்பின் யூடியூப் சேனல் தற்காலிகமாக முடக்கம்

Published On 2021-01-13 21:18 GMT   |   Update On 2021-01-13 21:18 GMT
பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து டிரம்பின் யூடியூப் சேனல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நாடாளுமன்றம் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதன் காரணமாகவே நாடாளுமன்ற கலவரம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனைத்தொடர்ந்து டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதி டிரம்பின் கணக்குகளை முடக்கி வைத்தன.

முடக்கப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் டிரம்ப் வன்முறையை தூண்டும் சில பதிவுகளை வெளியிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் டிரம்பின் கணக்கு, ஜனவரி 20-ந்தேதி வரை (ஜோ பைடன் பதவியேற்பு விழா நடக்கும் நாள்) முடக்கப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளன.‌

இந்த நிலையில் பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் தனது யூடியூப் சேனலில் அண்மையில் பதிவிட்ட ஒரு வீடியோ சர்ச்சைக்குரியதாகவும் நிறுவன விதிமுறைகளுக்கு புறம்பானதாகவும் இருந்ததால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்பின் யூடியூப் சேனல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News