செய்திகள்
ஸ்பெயினில் பனிப்பொழிவு

ஸ்பெயினில் கடும் பனிப்பொழிவு - பொதுமக்கள் அவதி

Published On 2021-01-09 17:28 GMT   |   Update On 2021-01-09 17:28 GMT
ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
மாட்ரிட்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பாட்டுள்ளது. பிளோமினா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பனி படர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அத்தியாவசியப்பொருடகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றனர். சுற்றுலா பயணிகள் பலரும் சுற்றுலாத்தளங்களை விட்டு திரும்பி வர முடியாமல் சிக்கியுள்ளனர். மேலும், பனிப்பொழிவு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

ஸ்பெயினில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்பெயினில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக வீடுகள், சுற்றுலா பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News