செய்திகள்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம்

Published On 2021-01-09 13:41 GMT   |   Update On 2021-01-09 13:41 GMT
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.
பியோங்யாங்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உலகில் என்ன பிரச்சினைகள் நடைபெற்றாலும் தன் நாட்டில் மக்கள் பசி பட்டினியால் அவதி பாட்டாலும் கவலையின்றி அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.

வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச எதிர்ப்பையும் தாண்டி பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

வடகொரியாவின் எதிரி நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் அமெரிக்கா பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. இருப்பினும் அந்த சந்திப்பு மட்டுமின்றி 2019ல் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பாலும் உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு இருநாட்டு உறவில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி கொரியாவின் ஐந்தாண்டு மாநாட்டில் பேசிய அவர், எங்கள் புரட்சிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக உள்ள அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும் என கூறினார்.

அமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும், வட கொரியா எதிர்ப்புக் கொள்கையின் உண்மையான தன்மையும் உண்மையான மனப்பான்மையும் ஒருபோதும் மாறாது.

ஒரு பொறுப்புள்ள அணுசக்தி நாடு என்ற வகையில், ஆக்கிரமிப்பு விரோத சக்திகள் அதை எதிர்த்து பயன்படுத்த முயற்சிக்காவிட்டால் வடகொரியா அணு ஆயுதங்களை துஷ்பிரயோகம் செய்யாது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், தந்திரோபாய அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஊடுருவி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளிட்ட புதிய ஆயுதங்களை நமது நாடு உருவாக்கி வருகிறது. அமெரிக்காவைத் தடுக்க வட கொரியா ஆயுதங்களுடன் முன்னேறி வருகிறது.

வட கொரியா-அமெரிக்கா உறவை நிறுவுவதற்கான திறவுகோல், வடகொரியாவுக்கு எதிரான தனது விரோதக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கூறினார்.
Tags:    

Similar News