செய்திகள்
கமலா ஹாரிஸ்

2021ம் ஆண்டில் சரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம் - கமலா ஹாரிஸ்

Published On 2021-01-01 21:30 GMT   |   Update On 2021-01-01 21:30 GMT
2021-ம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் என துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். 

இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் தேதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

2020-ம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

2021-ம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News