செய்திகள்
கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி

வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர்கள் - ஜோ பைடன் நியமனம்

Published On 2020-12-23 00:55 GMT   |   Update On 2020-12-23 00:55 GMT
இந்திய அமெரிக்கர்களான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோன்று துணை அதிபராக தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் பதவி ஏற்க இருக்கிறார்.

இதற்கிடையே, அதிபருக்கான அதிகாரத்துடன் அவர் பல்வேறு பதவிகளுக்கும் ஆட்களை நியமனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளிகளான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கி உள்ளார். இதில், அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கவுதம், பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இதுதவிர வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களின் வேறு சில பெயர்களையும் பைடன் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News