செய்திகள்
அதிபர் ஜெயிர் போல்சனாரோ

கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளப்போவதில்லை - பிரேசில் அதிபர் சொல்கிறார்

Published On 2020-12-16 22:34 GMT   |   Update On 2020-12-16 22:34 GMT
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என ஜெயிர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்
பிரேசிலியா:

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளில் அந்த நாடு உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கிறது. பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாது என்றும் அந்த நாட்டில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என ஜெயிர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News