செய்திகள்
டிரம்ப் - சண்ட்ரா லிண்ட்செ (தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்மணி)

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி - ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா’ என டிரம்ப் டுவீட்

Published On 2020-12-14 15:12 GMT   |   Update On 2020-12-14 15:12 GMT
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா, உலகிற்கு வாழ்த்துக்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. 

அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது தொடர்பாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

’முதல் தடுப்பூசி நிர்வகிக்கப்படுகிறது. வாழ்த்துக்கள் அமெரிக்கா! உலகிற்கு வாழ்த்துக்கள்’

என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News