செய்திகள்
ஒலிஷ்யா சிமினோவா

இப்படி செய்ததால் வந்த வினை... இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய ஐபோன்

Published On 2020-12-11 13:25 GMT   |   Update On 2020-12-11 13:43 GMT
குளியலறை அருகே சார்ஜ் போட்டப்பட்டிருந்த ஐபோன் சார்ஜ் வையருடன் தண்ணீர் இருந்த குளியலறை தொட்டிக்குள் விழுந்ததில் தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவின் அர்க்ஹங்கில்ஸ் நகரை சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண் ஒலிஷ்யா சிமினோவா. தனியார் துணிக்கடையில் வேலை செய்துவரும் இவர் அர்க்ஹங்கில்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். 

இவர் குளியலறையில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தையும் கொண்டவராக இருந்துள்ளார். குளியலறையில் தான் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்கு அருகில் உள்ள பிளக் பாயிண்ட்-டில் சார்ஜ் போட்டுவிட்டு குளிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.  

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி ஒலிஷ்யா சிமினோவா குளியல் அறைக்கு தனது ஐபோனை கொண்டு சென்றுள்ளார். அங்கு குளியறை தண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும்போதும் செல்போனை பயன்படுத்தியுள்ளார். 

ஐபோனை சிறிது நேரம் பயன்படுத்திய சிமினோவா அதை அருகில் உள்ள பிளக் பாயிண்-டில் சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை குளியலறை தொட்டிக்கு மிக அருகில் வைத்துள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் போட்டிருந்த ஐபோன் 8 சார்ஜ் ஒயருடன் சிமினோவா குளித்துக்கொண்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. 

சார்ஜ் போடப்பட்டிருந்த ஐபோன் சார்ஜ் ஒயருடன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததில் சிமினாவோ குளித்துக்கொண்டிருந்த குளியல் தொட்டி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. 

இதனால், குளித்துக்கொண்டிருந்த சிமினோவா மீது மின்சாரம் பாய்ந்து தான் குளித்துக்கொண்டிருந்த தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிமினோவாவை பார்ப்பதற்காக அவரது குடியிருப்புக்கு வந்த அவரது தோழி டரியா குளியலறை தொட்டிக்குள் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த சிமினோவாவை தொட்டு எழுப்ப முயற்சித்துள்ளார்,



அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட டரியா குளியலறை தொட்டியை விட்டு விலகி சென்று தண்ணீர் தொட்டிக்குள் எவ்வாறு மின்சாரம் பாய்ந்தது என பார்த்துள்ளார்.

அப்போது குளியலறை தொட்டிக்குள் பிளக்பாயிண்ட் உடன் இணைக்கப்பட்ட சிமினோவாவின் ஐபோன் 8 சார்ஜ் ஒயருடன் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அந்த ஐபோன் குளியலறை தொட்டி தண்ணீருக்குள் மூழ்கிக்கிடந்தபோதும் அதில் தொடர்ந்து சார்ஜ் ஏறிக்கொண்டுருந்ததை கண்டு அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பிளக் பாயிண்டில் இருந்த ஸ்விட்சை அணைத்து ஐபோன் சார்ஜருக்கு மின்சாரம் செல்வதை நிறுத்தினார்.   

பின்னர் டரியா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குளியலறை தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த சிமினோவாவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதபரிசோதனையில் குளியலறை தொட்டி அருகே சார்ஜ் போடப்பட்டிருந்த சிமினோவாவின் ஐபோன் 8 செல்போன் சார்ஜருடன் தவறுதலாக சிமினோவா குளித்துக்கொண்டிருந்த குளியலறை தொட்டிக்குள் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிமினோவா உயிரிழந்தது உறுதியானது.  

சிமினோவாவின் உயிரிழப்பை தொடர்ந்து குளியலறையில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News