செய்திகள்
ஹரி சுக்லா

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ளும் இந்திய வம்சாவளி முதியவர்

Published On 2020-12-08 06:26 GMT   |   Update On 2020-12-08 06:26 GMT
இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
லண்டன்:

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்ப முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. 

அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் இன்று (டிசம்பர் 8) பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் உலகம் முழுவதும் எழுந்தது. 

அந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் இங்கிலாந்தில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்பவர்கள் பட்டியலில் இந்திய
வம்சாவளியை சேர்ந்த 87 வயது நிரம்பிய முதியவர் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் டைனி மற்றும் வெர் பகுதியில் வசித்துவரும் 87 வயதான இந்திய வம்சாவளி முதியவர் ஹரி சுக்லா பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை முதலில் எடுத்துக்கொள்பவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

கொரோனா தடுப்பூசியை முதலில் எடுத்துக்கொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தொடர்பாக டாய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் ஹரி சுக்லாவை தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது பேசிய ஹரி சுக்லா, ‘கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்வது தொடர்பாக எனக்கு தொலைபேசியில் தகவல் வந்தபோது இந்த வாய்ப்பில் நான் பங்களிப்பதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்’ என்றார். 
Tags:    

Similar News