செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு

Published On 2020-12-03 01:18 GMT   |   Update On 2020-12-03 01:18 GMT
ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இஸ்லாமாபாத்:

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஜாமீன் பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார். ஆனால் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார்.

இதனிடையே அல் அஜிசியா மற்றும் ஆவென் பீல்டு ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நவாஸ் ஷெரீப்புக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த ஊழல் வழக்குகள் நீதிபதிகள் அமீர் பாரூக் மற்றும் மோசின் அக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தனர்.
Tags:    

Similar News