செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்- மருத்துவ ஆய்வில் தகவல்

Published On 2020-12-01 07:12 GMT   |   Update On 2020-12-01 07:39 GMT
கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

பெர்லின்:

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது.

இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 பேருடைய மூளை மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் 22 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள். அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் மூக்கு வழியாக சென்று மூளைக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூளையில் உள்ள திரவங்களில் கொரோனா வைரசின் மரபணுக்கூறுகள் ஒட்டிக் கொண்டிருந்தது தென்பட்டது. அதுமட்டுமல்லாமல் பெருமூளை தண்டு வட நீரிலும் வைரஸ் மரபணுக்கள் காணப்பட்டன.

எனவே கொரோனா வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது என்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்தது. மனிதனை கொரோனா வைரஸ் தாக்கினால், அது மூளை பகுதிக்குள் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்பு மண்டலம் முழுவதையும் அது பாதிக்க செய்துவிடும் என்று ஆய்வு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆய்வறிக்கை நேச்சர் நியூரோ சயின்ஸ் என்ற அறிவியல் ஆய்வு பத்திரிகையில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News