செய்திகள்
13 அடி நீள முதலை

வாத்தை வேட்டையாடிய 13 அடி நீளமுடைய ராட்சத முதலை - வைரல் வீடியோ

Published On 2020-11-30 16:08 GMT   |   Update On 2020-11-30 16:08 GMT
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 13 அடி நீளமுடைய ராட்சத முதலை வாத்தை வேட்டையாடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது.

இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய இருவரும் நேற்று சென்றிருந்தனர்.

சதுப்புநில பகுதியை சுற்றிப்பார்த்துக்கொண்டுந்தபோது அப்போது பிரம்மாண்டமான முதலை ஒன்று தண்ணீரின் மேற்பரப்பில் இருந்த வாத்தை வேட்டையாடியதை கண்டனர். 

இதையடுத்து, அவர்கள் உடனடியாக தங்கள் செல்போனில் முதலை வாத்தை வேட்டையாடுவதை வீடியோ எடுத்தனர்.

வார்த்தை இலாவகமாக வேட்டையாடிய அந்த முதலை ராட்சத அளவில் 13 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அவ்வளவு நீளம் கொண்ட அந்த முதலையை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தாங்கள் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து, 13 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட முதலை வாத்தை வேட்டையாடிய அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வலைதளவாசிகள் பலரும் இந்த முதலை டைனோசர் காலத்தில் உள்ள முதலையின் நீளம் உடையது எனவும், ஃபுளோரிடாவில் இது மற்றுமொரு நாள் எனவும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News