செய்திகள்
மும்பை தாக்குதல்

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் பரிசு

Published On 2020-11-28 20:20 GMT   |   Update On 2020-11-28 20:20 GMT
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க நீதித்துறை திட்டத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய உறுப்பினர் சஜித் மிர். மும்பையில் கடந்த 2008 நவம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி. இவனை கைது செய்ய உதவினாலோ அல்லது அவரைப் பற்றி தகவல் அளித்தாலோ 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News