செய்திகள்
கொரோனா தடுப்பூசி

குறைந்தது 4.3 பில்லியன் தடுப்பூசிகள் உடனே வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர்

Published On 2020-11-24 14:24 GMT   |   Update On 2020-11-24 14:24 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தது 430 கோடி டோஸ் தடுப்பூசிகள் உடனே வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறுகையில், ‘‘இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் 90 சதவீத வெற்றி பெற்று இருந்தாலும் குறைந்த அளவிலான பரிசோதனை முடிவுகளிலே கிடைத்து இருப்பது நம்பிக்கை அளிக்க தவறியதாக உள்ளது’’ என்றார்.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட அதிகளவிலான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தது 430 கோடி டோஸ் தடுப்பூசிகள் உடனே வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News