செய்திகள்
கோரி லூவண்டோவ்ஸ்கை

டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-12 22:36 GMT   |   Update On 2020-11-12 22:36 GMT
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பிரசார ஆலோசகராக இருந்த லூவண்டோவ்ஸ்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.  இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார்.  இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் பொறுப்பேற்று கொள்கிறார்.

எனினும், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்ற ரீதியில் அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.  கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியாதது, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்ளாதது டிரம்பின் வீழ்ச்சிக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகராக உள்ள கோரி லூவண்டோவ்ஸ்கை என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  தொடர்ந்து அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.
Tags:    

Similar News