செய்திகள்
அணு ஆயுதம்

3-ம் உலகப்போர் ஏற்படலாம் - எச்சரிக்கும் இங்கிலாந்து ராணுவ தளபதி

Published On 2020-11-08 11:24 GMT   |   Update On 2020-11-08 11:24 GMT
3-ம் உலகப்போர் ஏற்படுவதற்கான ஆபத்து உண்மையில் உள்ளதாக இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் ‘ஸ்கை நியூஸ்’ செய்தி நிறுவனத்திற்கு இன்று சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து
பேசினார். 

தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் பேசியதாவது:-

பொருளாதார நெருக்கடிகள் பல காலங்களில் பாதுகாப்பு நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சூழ்நிலை பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும்.

நாம் அனைவரும் தற்போது மிகவும் நிச்சயமற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது பல பகுதிகளில் (பிராந்தியங்கள்) நடந்து வரும் மோதல்கள் தவறான முடிவுகள் காணமாக மிக விரைவில் முழுமையான போராக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது. இது தான் தற்போது மிகவும் உண்மையான ஆபத்து. அதில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டும். 

சண்டையில் ஈடுபடுவர்கள் தங்கள் செயல்களால் போர் ஏற்படலாம் என்ற உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். இதனால், நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே அதிக அளவிலான நபர்களும், ஆயுதங்களும் சண்டையில் ஈடுபடுத்தப்படலாம். இது நாடுகளுக்கு இடையே முழுமையான போருக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.

வரலாற்று நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கடந்த நூற்றாண்டை நாம் திரும்பி பார்க்கும் போது இரண்டு உலகப்போர்களுக்கு முன்னதாகவும் மோதல்கள் தவறான முடிவுகள் காரணமாக உலகப்போருக்கு நம்மை கொண்டு சென்று விட்டது என்பதை மறுக்கமுடியாது. அது போன்ற ஒன்றை நாம் மீண்டும் பார்க்கக்கூடாது என நம்புகிறோம்.



3-ம் உலகபோர் உண்மையிலேயே ஏற்படுமா? என்றால் அதற்கான ஆபத்துக்கள் உள்ளது என்று கூறுகிறேன். அந்த அபாயங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

வரலாற்றை திருப்பி பார்க்கும்போது நீங்கள் அதில் இருந்து உங்கள் அனுபவங்களை கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் பிராந்தியங்கள் மோதல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மோதல்கள் உலக போருக்கு வழிவகுக்கலாம்.

என்றார்.

பிராந்திய மோதல்கள் எவை என்பது குறித்து தளபதி ஜெனரல் நிக் கார்டர் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அர்மீனியா-அசர்பைஜான் மோதல், சிரியாவில் ரஷியா, ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா-சீனா, ரஷியா-உக்ரைன் இடையேயான மோதல் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மோதல்களாகவும், உலகப்போருக்கு கொண்டு செல்லும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News