செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள்

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் -ஈராக் தலைநகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-08 09:23 GMT   |   Update On 2020-11-08 09:23 GMT
ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படைகளை முழுவதும் வெளியேற்ற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, படை வீரர்களை சுமார் 3,000 ஆகக் குறைத்தது. மற்ற நட்பு நாடுகளும் படை பலத்தை குறைத்துக்கொண்டன. 

இந்த நிலையில் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை திருப்பி அனுப்பக்கோரி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று மாலை தலைநகர் பாக்தாத் சாலைகளில் இறங்கி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு அங்கீகரிக்கப்படாவிட்டால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர். 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி மற்றும் ஈராக் துணை ராணுவ தளபதி பலியான நிலையில் ஈராக் அமைச்சரவையில் அமெரிக்க ராணுவ வெளியேற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News