செய்திகள்
கூகுள் தேடல்

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

Published On 2020-11-04 03:20 GMT   |   Update On 2020-11-04 03:20 GMT
அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
வாஷிங்டன்:

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது. துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது. 

நவம்பர் 3 மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி (உள்ளூர் நேரப்படி இரவு) ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார்.

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்தவண்ணம் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இன்று கூகுள் தேடலில் முதலிடம் வகித்த வார்த்தை எது என்று பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. 

டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், உற்சாக பானங்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் அருகில் உள்ள மதுக்கடைகள் ( 'Liquor stores near me') என்ற வார்த்தை கூகுள் தேடலில் இன்று முதலிடத்தில் இருந்ததாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News