செய்திகள்
துப்பாக்கிச்சூடு

பிரான்சில் கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு

Published On 2020-10-31 22:31 GMT   |   Update On 2020-10-31 22:31 GMT
பிரான்சில் கிரேக்க பாதிரியாரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

தேவாலயத்தை மூடும் பணியில் பாதிரியார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நபர் பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அடிவயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கியால் சுட்ட நபரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 29-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News