செய்திகள்
விபத்துக்குள்ளான பள்ளி பஸ்

பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது லாரி மோதி விபத்து - குழந்தைகள் உள்பட 21 பேர் பலி

Published On 2020-10-31 12:38 GMT   |   Update On 2020-10-31 12:38 GMT
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா:

நைஜீரியா நாட்டின் இநூகு மாகாணம் அவ்கு நகரில் உள்ள மழலையர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நேற்றூ பள்ளிக்கூட பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பள்ளி குழந்தைகள் 61 பேரும், சில ஆசிரியர்களும் பயணம் செய்தனர்.

அவ்கு நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த லாரி பள்ளி பஸ் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்த பஸ் நிலைகுலைந்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனாலும், இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது. அதிவேகமாக வந்த லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசமான சாலைகள், அதிவேக பயணம் காரணமாக நைஜீரியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
Tags:    

Similar News