செய்திகள்
சார்ஜா போலீஸ் துறையின் வாடிக்கையாளர் சேவை மையங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சார்ஜா போலீஸ் துறையின் வாடிக்கையாளர் சேவை மையங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-10-31 08:09 GMT   |   Update On 2020-10-31 08:09 GMT
சார்ஜா போலீஸ் துறையின் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சார்ஜா:

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜாவில் போலீஸ் துறை அலுவலகங்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிப்பதை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் துறையின் வாடிக்கையாளர் சேவை மையங்களில் வாடிக்கையாளர் சேவைகள் நடைபெறுவது கண்காணிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் உள்துறை அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பு தருவதற்கு உதவியாக இருக்கும். இதில் நேற்று சார்ஜா போலீஸ் துறை செயல்பாடுகளின் பொது இயக்குனர் அகமது ஹாஜி அல் சர்கல் உயர் அதிகாரிகளுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். மத்திய மண்டல போலீஸ் அலுவலகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, அவர் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது தரமான சேவை, உயர்தரத்திலான செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அணுகுமுறைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினர். பின்னர், வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் போலீஸ் துறை திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார். இதில் சார்ஜா போலீஸ்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த ஆய்வுகள் மூலம் பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குவது நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News