செய்திகள்
‘ஸ்மார்ட்’ கைப்பட்டை.

தனிமைப்படுத்தும் காலத்தில் செய்யும் விதிமீறலுக்கு 300 ஓமன் ரியால் அபராதம்

Published On 2020-10-31 03:19 GMT   |   Update On 2020-10-31 03:19 GMT
தனிமைப்படுத்தும் காலத்தில் செய்யும் விதிமீறலுக்கு 300 ஓமன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என ஓமன் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஸ்கட்:

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டிற்குள் வரும் விமான பயணிகளுக்கு பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு அவர்களது கையில் ‘ஸ்மார்ட்’ கைப்பட்டை அளிக்கப்படுகிறது. இதில் அந்த விமான பயணிகள் சுகாதார விதிமுறைகளின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ‘தராசுத் பிளஸ்’ எனப்படும் ‘செயலி’யின் மூலம் அந்த கைப்பட்டை அவர்களது செல்போனில் இணைக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால் ஒரு மாத கால சிகிச்சையில் சேர்க்கப்படுவர். சோதனை மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்படும் (குவாரண்டைன்) காலங்களில் செய்யும் விதிமீறலுக்கு 300 ஓமன் ரியாலும், ‘ஸ்மார்ட்’ கைப்பட்டையை சேதப்படுத்துதல் மற்றும் திருப்பி அளிக்கவில்லை என்றால் 200 ஓமன் ரியாலும், மற்ற எந்தவிதமான விதிமீறல்களை செய்தாலும் 100 ஓமன் ரியாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதில் ‘குவாரண்டைன்’ காலம் அல்லது சிகிச்சை நிறைவடைந்ததும் அவர்கள் அணிந்துள்ள ‘ஸ்மார்ட்’ கைப்பட்டையை மீண்டும் சுகாதாரத்துறையிடம் திருப்பி அளித்து விட வேன்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News