செய்திகள்
சுனாமி

2004 சுனாமியை ஞாபகப்படுத்திய துருக்கி நிலநடுக்கம்

Published On 2020-10-30 15:11 GMT   |   Update On 2020-10-30 15:11 GMT
துருக்கியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கடல் நீர் ஊருக்குள் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி என்னும் பேரலை உருவானது. இதனால் இஸ்மிர் நகரத்திற்குள் கடல் நீர் புகுந்தது. வீதியில் நின்ற கார்கள், வீட்டில் இருந்த பொருட்களை கடல் நீர் சுருட்டிக் கொண்டு சென்றது.

2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இந்தோனேசியா, இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டு கடும் விளைவை ஏற்படுத்தியது. அந்த சுனாமி அலையை தற்போது துருக்கி நிலநடுக்கம் ஞாபகப்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News