செய்திகள்
ஆண்ட்ரெஜ் துடா

கருக்கலைப்பு தடைச்சட்டம் - நிலைப்பாட்டை மாற்றிய போலந்து ஜனாதிபதி

Published On 2020-10-29 23:12 GMT   |   Update On 2020-10-29 23:12 GMT
போராட்டம் காரணமாக கருக்கலைப்பு சட்டம் பற்றிய தனது நிலைப்பாட்டை போலந்து ஜனாதிபதி மாற்றியுள்ளார்.
போலந்து:

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று போலந்து. போலந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு விரோதமானது என அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.

இது பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தலைநகர் வார்சாவில் உள்ள ஆளுங்கட்சி தலைவர் கசின்ஸ்கியின் வீட்டின் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் கைகளில் பதாகைகளை ஏந்தி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா கருவுற்றிருக்கும் கருவை கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் இத்தகைய செயல்களுக்கு சட்டம் தேவையாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News