செய்திகள்
கோப்புப்படம்

மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி - பாகிஸ்தான் பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Published On 2020-10-27 18:53 GMT   |   Update On 2020-10-28 07:09 GMT
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களில், 49 கல்வி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காயிதே ஆசம் பல்கலைக்கழகம் உள்ளது. அது, அந்நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அங்கு 3 துறைகளில் பல மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 3 துறைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ‘சீல்’ வைக்கப்பட்ட துறைகளின் மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடரும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 40 நாட்களில், இஸ்லாமாபாத்தில் 49 கல்வி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News