செய்திகள்
டிரம்ப்

நவம்பர் 4க்கு பிறகு அந்த சொல்லை கேட்கும் நிலை வராது -டிரம்ப்

Published On 2020-10-25 07:48 GMT   |   Update On 2020-10-25 07:48 GMT
ஒரு விமானம் விழுந்து 500 பேர் இறந்தால்கூட அதை ஊடகங்களில் பெரிதாக பேசுவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 88 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 57.41 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது வரை 28.56 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் புதிய தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கரோலினா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை ஊடகங்களில் யாரும் கேட்கும் நிலை வராது என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

‘கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளனர். ஒரு விமானம் விழுந்து 500 பேர் இறந்தால்கூட அதை பெரிதாக பேசுவதில்லை. எப்போதும் கோவிட் பற்றி தான் பேசப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4-ந் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது’ என்று கூறி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார் டிரம்ப்.
Tags:    

Similar News