செய்திகள்
முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு

Published On 2020-10-23 22:59 GMT   |   Update On 2020-10-23 22:59 GMT
அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்குகிறது. தற்போது வரை 28 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News