செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

காஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட நாள் இன்று - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

Published On 2020-10-22 15:08 GMT   |   Update On 2020-10-22 15:08 GMT
ஒருங்கிணைந்த காஷ்மீர் 1947 அக்டோபர் 22-ம் தேதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் 73-வது ஆண்டை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கருப்பு நாளாக அனுசரிக்கிறது.
லாகூர்: 

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா, பாகிஸ்தான் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை பெற்று சுதந்திரமடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக உருவான பின்னரும் ஜம்மு-காஷ்மீர் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்தது.

ஆனால், தனிநாடாக அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தன்னாட்சி பெற்றுள்ள காஷ்மீர் மீது படையெடுத்தது. ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 220-ம் தேதி படையெடுத்தது. 

இந்த படையெடுப்பின்போது காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிமித்துவந்தது. இதனால், காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் 
இந்தியாவுடன் கைகோர்த்தார். 

இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீரை மையமாக கொண்டு முதல் போர் ஏற்பட்டது. 1948 வரை நீடித்த இந்த சண்டை 1949 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்த போரில் ஒருங்கிணைந்த காஷ்மீரின் பல பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அந்த பகுதிகள் தற்போதுவரை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்து இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் மற்றும் மீர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கருப்புநாளாக அனுசரிக்கப்பட்டது. 

இந்த நகரங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கானோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News