செய்திகள்
சிகிச்சை பெறும் நோயாளி

ஈரானில் கொரோனா தாக்கத்துக்கு ஒரே நாளில் 337 பேர் உயிரிழப்பு

Published On 2020-10-19 21:51 GMT   |   Update On 2020-10-19 21:51 GMT
கொரோனா வைரஸ் தொற்றினால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்து 712-ஐ கடந்துள்ளது.
டெஹ்ரான்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
  
இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் பட்டியலில் ஈரான் 13வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்து 712 ஆக-உயர்ந்துள்ளது.

ஈரானில் மேலும் 4,251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 5.34 லட்சத்தைத் தாண்டியுள்ளது என ஈரான் அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News