செய்திகள்
கொரோனா பரிசோதனை

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்தது

Published On 2020-10-19 00:56 GMT   |   Update On 2020-10-19 00:56 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.18 லட்சத்தைக் கடந்துள்ளது. 
Tags:    

Similar News