செய்திகள்
கொரோனா வைரஸ்

மெக்சிகோவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்தது

Published On 2020-10-19 00:13 GMT   |   Update On 2020-10-19 00:13 GMT
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 5,447 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெக்சிகோ சிட்டி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 10-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 5447 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.47 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கத்தால் ஒரே நாளில் 355 பேர் உயிரிழந்துள்ளதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 059 ஆக உயர்ந்துள்ளது.

6.15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News