செய்திகள்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 26 பேரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

Published On 2020-10-18 09:50 GMT   |   Update On 2020-10-18 09:50 GMT
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

தமிழக அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குரூப்-4 தேர்வு, வி.ஏ.ஓ. தேர்வு, குரூப்-2 தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்டதாக மேலும் 26 பேரை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக 20 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர். இதுவரை 3 தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேர்வர்கள், தேர்வு எழுத உதவியவர்கள், அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

கைது செய்யப்பட்டிருக்கும் அரசு அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய துறை ரீதியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் 90 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மேலும் 40 பேர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News