செய்திகள்
வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

2020-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published On 2020-10-07 10:09 GMT   |   Update On 2020-10-07 11:34 GMT
இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண்கள் இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இமானுவேல் சார்பென்டியர் பிரான்ஸ் நாட்டவர் மற்றும் ஜெனிஃபர் ஏ டவுட்னா அமெரிக்கவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து நாளை (8-ம்தேதி) இலக்கியத்திற்கும், 9-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News