செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

துபாயில், மேலும் 3 கொரோனா பரிசோதனை மையங்கள் திறப்பு- அதிகாரி தகவல்

Published On 2020-09-30 09:24 GMT   |   Update On 2020-09-30 09:24 GMT
துபாய் நகரில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மூன்று புதிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
துபாய்:

துபாய் சுகாதார ஆணையத்தின் கிளினிக்கல் ஆதரவு சேவை மற்றும் நர்சிங் துறையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பரிதா அல் காஜா கூறியதாவது:-

துபாய் நகரில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மூன்று புதிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை மையங்கள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இவை அல் ரசிதியா மஜ்லிஸ், அல் ஹம்ரியா துறைமுகம் மஜ்லிஸ் மற்றும் ஜுமைரா 1 துறைமுக மஜ்லிஸ் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையமானது வாரம் முழுவதும் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஏற்கனவே அல் சபாப் அல் அக்லி விளையாட்டு சங்கம் மற்றும் அல் நாசர் கிளப் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பிரத்யேக மையங்கள் மட்டும் 5-ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News