செய்திகள்
கோப்புப்படம்

டிக்-டாக் செயலி மீதான தடை : ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை

Published On 2020-09-28 21:03 GMT   |   Update On 2020-09-28 21:03 GMT
டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்:

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந்தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கார்ல் நிகோல்ஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிக்-டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு முதல் சட்டத் திருத்த உரிமைகளை மீறுவதாகும், வர்த்தகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதாகவும் என்று வாதிட்டனர்.

அதனைத் தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News