செய்திகள்
சீன அதிபர் ஜின்பிங்

எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது: ஐ.நா.வில் சீன அதிபர் பேச்சு

Published On 2020-09-22 16:37 GMT   |   Update On 2020-09-22 16:37 GMT
எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது என ஐ.நா. பொது சபை கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உலக தலைவர்கள் காணொலி காட்சி வழியே கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் பேசுகின்றனர்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, உலகில் மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அமைதி, வெளிப்படை தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை.

மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் விவாதங்களை பேச்சுவார்த்தை வழியே சுமூக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்’’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News