செய்திகள்
கோப்பு படம்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்

Published On 2020-09-18 17:48 GMT   |   Update On 2020-09-18 17:48 GMT
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் ஆட்டில்பரோ உயர்நிலை பள்ளி இந்த வாரம் முதல் செயல்பட தொடங்கியது. இந்த பள்ளியில் 6 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் 5 பேரை பெற்றோர் தனிமைப்படுத்தி உள்ளனர். ஆனால், 6ம் வகுப்பு படிக்கும் கொரோனா பாதித்த மாணவனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்நகரில் இதுவரை 1.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 9,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு நகர மேயர் ஹெராக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். உங்கள் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உங்களுக்கு தெரிய வந்தபின், அவனை எந்த சூழ்நிலையிலும் பள்ளி கூடத்திற்கு நீங்கள் அனுப்பி வைத்திருக்க கூடாது என கூறியுள்ளார்.

எனினும், கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அதனால், 5 நாட்களே தனிமைப்படுத்துதல் என நாங்கள் நினைத்தோம் என மாணவன் மற்றும் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News